Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 16 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
மரதன்கடவள - ஹபரண வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்னாயக்க தெரிவித்தார்.
தினேஷ் மதுசங்க (வயது 28) என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான லொறியொன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரமொன்றில் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.
மேற்படி குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மரதன்கடவள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
காயமடைந்த இருவரும் மரதன்கடவள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago