2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக பலகை அரியும் நிலையத்தை நடத்திய ஐவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சீ.சபூர்தீன்)

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பலகை அரியும் நிலையமொன்றை நடத்திச்சென்ற ஐவருக்கு ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபா அபராதம் விதித்து அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிக்கா மாரப்பன தீர்ப்பளித்தார்.

பண்டாரநாயக்கா வீதி, விஜயபுர பகுதியைச் சேர்ந்த ஐவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஐவரும் சட்டவிரோதமான முறையில் அநுராதபுரம் புபுதுபுர பகுதியில் சட்;டவிரோதமாக இந்நிலையத்தினை நடத்திச் சென்றபோது உலுக்குளம் பொலிஸ் பிரிவின் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேக்கு குற்றிகள் 58, வாள், இரண்டு சக்கர உழவு இயந்திரம் உட்பட பல பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு தேக்கு குற்றிகள் மற்றும் வாளினை அரச உடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .