2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை மாணவர்கள் இலவசமாக பார்வையிட முடியும்

Super User   / 2012 ஜனவரி 19 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இலவசமாக பார்வையிட முடியும் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளர்.

இதற்காக மாணவர்கள் பாடசாலை சீருடையில் வரும்படியும் பைகள் மற்றும் பொதிகளை எடுத்து வருவதை தவிர்த்து கொள்ளுமாறும் ஏற்பாட்டு குழுவினர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, கண்காட்சியினை பார்வையிடுவதற்காக வரும் ஏனையோருக்கு 20 ரூபா பெறுமதியான லொத்தர் டிக்கட்டொன்று அனுமதி அட்டையாக விநியோகிக்கப்படவுள்ளது. குறித்த லொத்தர் டிக்கட்டுக்கான விசேட சீட்டிழுப்பு ஒவ்வொரு தினமும் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .