2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

குப்பி விளக்குகளின் ஒளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட யுகத்திற்கு இந்த வருட முடிவுக்குள் முற்றுப்

Kogilavani   / 2012 ஜனவரி 19 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்,அப்துல்லாஹ் )

குப்பி விளக்குகளின் ஒளியில் மாணவர்கள் தமது வீடுகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட யுகத்திற்கு இந்த வருட முடிவுக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என வடமேல் மாகாண மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை, வீதி அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தெரிவித்தார்.

தேசிய மின் உற்பத்தியின் மூலம் மின்சாரத்தினை வழங்க முடியாத வடமேல் மாகாணத்தில் உள்ள வீடுகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தினை வழங்கும் இரண்டாம் கட்ட செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கற்பிட்டி பிரதேசத்தில் தீவுப் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு இந்த சூரிய சக்தியிலான மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் 'இருளுக்கு முற்றுப்புள்ளி, அனைவருக்கும் என்றும் மின்சாரம்' எனும் திட்டத்திற்கு அமைவாகவே இந்த வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் வடமேல் மாகாண மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை, வீதி அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் அமைச்சு சுமார் இருபது இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், அதன் மூலம் 97 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்குரிய மொத்த செலவில் ஐம்பது வீதத்தினை அமைச்சு வழங்குவதுடன் மிகுதியை பயனாளர்கள் வழங்க வேண்டும்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண உறுப்பினர் என். டி. எம். தாஹிர் மற்றும் வடமேல் மாகாண அமைச்சின் மின்சக்திப் பிரிவின் அதிகாரி ரசிக ஏக்கநாயக்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • abdullah Friday, 20 January 2012 03:23 AM

    எப்ப நடந்தது?

    Reply : 0       0

    ragis Saturday, 21 January 2012 11:04 PM

    அப்டியா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X