2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி – முகத்துவாரம் பாலத்தின் நிர்மாண பணிகள் கைவிடப்பட்டதால் மக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 20 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட கற்பிட்டி - முகத்துவாரத்திற்கு இடையில் அண்மையில் போடப்பட்ட பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையினால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து செய்வதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த வருடம் கற்பிட்டிக்கும் முகத்துவாரத்துக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதுடன், கற்பிட்டி துரையடியில் இருந்து சிறிது தூரமும், முகத்துவாரத்தில் இருந்து சிறிது தூரமும் இவ்வாறு பாலம் போடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் இடையில் கைவிடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் கற்பிட்டியில் இருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த முகத்துவாரம் கிராம மக்கள் தமது போக்குவரத்து தேவைகளை சிறுகடல் மார்க்கமாவே இன்று வரைக்கும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் இப்பிரதேச மக்கள் இயந்திரப் படகு மூலமே முகத்துவாரத்திலிருந்து கற்பிட்டி துரையடி பிரதேச கரையை வந்தடைகின்றனர். கடல்மார்க்கமாக இயந்திரப் படகு மூலம் கற்பிட்டி கரையை வந்தடைவதற்கு போக்குவரத்துக் கட்டணமாக ஒருவருக்க 30 ரூபா அறவிடப்படுகிறது. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இயந்திரப் படகு சேவையே மேற்கௌ;ளப்படுகின்றது.

எனவே, முகத்துவாரப் பிரதேச மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு இடை நிறுத்தப்பட்டுள்ள கற்பிட்டி துரையடி - முகத்துவாரத்திற்கு இடையிலன பாலத்தின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X