Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 22 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நவ்கத்தேகம பிரதேச செயலாளர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் மொல்வெவ பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான மேற்படி பெண் செய்த முறைப்பாட்டை அடுத்து நவ்கத்தேகம பிரதேச செயலாளர் கைதுசெய்யப்பட்டார்.
நவ்கத்தேகம பிரதேச செயலாளர் இச்சம்பவத்தின்போது அரசாங்க வாகனத்தை பயன்படுத்தியதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள நிலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரியபோதிலும், இதற்கு பதில் நீதவான் நட்வி மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
riswan Sunday, 22 January 2012 10:05 PM
இப்படிப்பட்டவர்களுக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேணும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago