2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பிங்கிரிய வாகன விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

குருநாகல் - பிங்கிரிய பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுடன் டிப்பர் வண்டி ஒன்று மோதியதை அடுத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த மூவரும் பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தின் காரணமாக நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .