2025 மே 24, சனிக்கிழமை

ஆபாச படங்களடங்கிய இறுவட்டுகளுடன் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 27 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ், எம்.எஸ்.மும்தாஜ்)

புத்தளம் நகரில் ஆபாச படங்கள் உள்ளடங்கிய இறுவட்டுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் நேற்று இரவு புத்தளம் கே.கே வீதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுவட்டுக்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் 26 ஆபாசப்பட இறுவட்டுக்களுடன் அதற்கு பயன்படுத்தக்கூடிய கணினியொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X