2025 மே 24, சனிக்கிழமை

சிலாபத்தில் பாடசாலை வாகனங்களில் திடீர் சோதனை நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூன் 28 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                         (எஸ்.எம்.மும்தாஜ்)
சிலாபம் நகரில் சேவையில் ஈடுபட்டுள்ள 'பாடசாலைச் சேவை' வாகனங்களின் தரத்தினை  பரிசோதிக்கும் திடீர் சோதனை நடவடிக்கையினை சிலாபம் மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து சிலாபம் பொலிஸார் நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.

சிலாபம் நகரில் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் சுமார் 64 பஸ் மற்றும் வான்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. இவற்றுள் சுமார் 30 வாகனங்கள் இவ்வாறு திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது இரண்டு பஸ் வண்டிகளுடன் ஒரு வானும் போக்குவரத்திற்கு தகுதியற்றதென தீர்மானிக்கப்பட்டு சேவையிலிருந்து நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் 15 வான், பஸ்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அவ் வாகனங்களில் உள்ள குறைகளை 14 தினங்களுக்குள் திருத்திக் கொண்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வாகன உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிலாபம் நகரில் ஏழு அரச பாடசாலைகள், இரண்டு சர்வதேச பாடசாலைகள் மற்றும் இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் இந்த 64 பஸ் மற்றும் வான்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X