2025 மே 24, சனிக்கிழமை

ஆனமடு பிரதேச செயலாளரை கெட்ட வார்த்தைகாளால் திட்டிய பெண் கைது

A.P.Mathan   / 2012 ஜூன் 28 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த)

ஆனமடு பிரதேசத செயலகத்திற்குள் நுழைந்து பிரதேச செயலாளரை கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாகச் சொல்லப்படும் பெண் ஒருவரை நேற்று புதன்கிழமை மாலை ஆனமடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளத்திலிருந்து மாஹோ வரையில் அதி சக்திகொண்ட மின்சார கம்பி பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மின்சார கம்பி இணைப்பு செல்லும் வழியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அதற்கான நஷ்டயீடுகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குச் சொந்தமான கொட்டுக்கச்சி எனும் பிரதேசத்தில் உள்ள காணியிலும் மரங்கள் வெட்டப்படவுள்ளதுடன் அதற்காக பிரதேச செயலாளரினால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நஷ்டயீடு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து குறித்த மரங்களை வெட்டுவதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த பிரதேசத்திலுள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு பிரதேச செயலாளர் மின்சார சபைக்கும் அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கும் அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த குறித்த பெண் நேற்று புதன்கிழமை மாலை பிரதேச செயலகத்திற்குள் நுழைந்து பிரதேச செயலக அதிகாரிகளின் முன்னிலையில் பிரதேச செயலாளரை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து அலுவலக அதிகாரிகள் இது பற்றி ஆனமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பின்னர் அங்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் இன்று ஆனமடு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X