2025 மே 24, சனிக்கிழமை

கற்பிட்டியில் களைகட்டும் கற்றாளைச் செய்கை

Menaka Mookandi   / 2012 ஜூன் 28 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி பிரதேசத்தில் கண்டக்குழி, பள்ளிவாசல் துறை, ஆணைவாசல் அகிய கிராமங்களில்  வதியும் கடற்றொழிலாளர்கள் தற்போது கற்றாளை மர செய்கையினை வர்த்தகரீதியில் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கரையோர மற்றும் கடற்வள பாதுகாப்பு நிறுவனத்தினால் கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் தற்போது வெற்றியளிக்கப்பட்டு பலர் இச்செய்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அழகுசாதன பொருட்களினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து கற்றாளை இலைகளுக்கான கேள்வியுள்ளதினாலும், இச்செய்கையினை பெண்களும், சிறுவர்களும் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது.

மாதாந்தம் கற்றாளை செய்கை வீட்டுத் தோட்டத்திலிருந்து 2500ரூபா முதல் 5000ரூபா வரை இலாபம் கிடைப்பதினாலும் இச்செய்கை பிரபல்யமடைந்து வருவதாக கரையோர மற்றும் கடற்வள பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கற்றாளைச் செடி நாட்டப்பட்டு 4 மாதங்களில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு இரண்டறை வருடங்கள் வரை மாதாந்தம் அறுவடை செய்வதாகவும் 1 கிலோ கிராம் கற்றாளை இலை 55 ரூபா முதல் 65 ரூபா வரை கம்பனிகளினால் கொள்வனவு செய்யப்படுவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X