2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விபத்தில் கணவன், மனைவி பலி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 04 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம், ஆனவிலுந்தாவ  பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று ரயில் பஸ்ஸுடன் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.

இரு  பிள்ளைகளின் பெற்றோரக்ன ஆராய்ச்சிக்கட்டு ஹெலம்பவட்டவன பிரதேசத்தைச் சேர்ந்த வென்சன் பொன்சேகா (வயது 55) மற்றும் அவரது மனைவியான ஜீ.சந்திராவதி (வயது 45) ஆகியோரே பலியானவர்களாவர்.

நேற்;று செவ்வாய்க்கிழமை மாலை பாதுகாப்பற்ற வீதிக்கடவையை இம்மோட்டார் சைக்கிள்  கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து சம்பவித்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்;டுள்ளன.

இவ்விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .