2025 மே 24, சனிக்கிழமை

வீடொன்றில் தங்கியிருந்த பாடசாலை மாணவிகளும் இளைஞர்களும் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 04 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம் நகரிலுள்ள வீடொன்றில் நாத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த  பாடசாலை மாணவிகள் இருவரும்  இளைஞர்கள் இருவரும்  ஒன்றாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,   இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவரும்  நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற 9ஆம் 10ஆம் வகுப்புக்களில் கல்வி கற்கும் 15 மற்றும் 16 வயதுடைய இம்மாணவிகள் பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலைச் சீருடையில்  இவ்விரு  இளைஞர்களுடன் சிலாபம் நோக்கிச் சென்றதாக மாரவில பொலிஸார் கூறினர். 

பாடசாலை முடிவடைந்து அதிக நேரமாகியும் இம்மாணவிகள் வீடு திரும்பாததையடுத்து இம்மாணவிகளின் பெற்றோர்கள் மாராவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இம்மாணவிகள் இருவரும் சிலாபத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவ்விரு மாணவிகளையும் இரு இளைஞர்களையும் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணொருவரையும் கைதுசெய்ததாக சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டனர். 

இம்மாணவிகளை  வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய பின்னர் அவர்களையும் கைதான இளைஞர்களையும் பெண்ணொருவரையும் மாராவில பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் மற்றும் மாராவில பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X