2025 மே 24, சனிக்கிழமை

புத்தளம் நெடுங்குளத்தை புனரமைக்க கோரிக்கை

Super User   / 2012 ஜூலை 04 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


புத்தளம் நகர சபைக்குற்பட்ட மிகவும் பழமை வாய்ந்த நெடுங்குளம் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் பற்றைக்காடாய்க் காட்சியளிப்பதனால் அக்குளத்தை புனரமைத்து பொதுமக்களின் பாவனைக்கு தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் நீளமான குறித்த குளம் புத்தளம் பகுதியிலுள்ள பிரதான குளமாகும். இந்தக் குளத்தின் ஊடாக பிரதேச மக்கள் தமது நீர்த் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

புத்தளம் பிரதேசத்தில் குழாய் நீர் தட்டுப்பாடாக உள்ள சமயத்தில் பிரதேச மக்கள் குறித்த குளத்தையே குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் குறித்த குளமானது மிக நீண்ட காலமாக உரிய முறையில் துப்பரவு செய்யப்படாமல் பாதுகாப்பின்றி காணப்படுகின்றது.

அத்துடன் குளத்தை சுற்றி பற்றைக்காடுகள் உள்ளதாகவும் குளத்திலுள்ள நீரில் தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த குளத்தின் அணைக்கட்டுகளில் சில பகுதிகள் சேதமடைந்து காணப்படுவதுடன் குளத்திற்கு போடப்பட்டிருக்கும் வான் கதவுகளும் பழுதடைந்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குளம் இவ்வாறு பாவனைக்கு உதவாது இருப்பது பற்றி புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸிடம் வினவியதற்கு,

"இந்தக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இந்தக் குளத்தை புனரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக" அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X