2025 மே 24, சனிக்கிழமை

கல்பிட்டியில் வெளிநாட்டு சுற்றுல்லா பயணிகள் அதிகரிப்பு

Super User   / 2012 ஜூலை 04 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


நாட்டில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதற்கமைய புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேசத்திலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

வழமையாக ஒக்டோபர் மாதம் தொடக்கமே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். ஆனால் இவ்வருடம் தற்போதே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கல்பிட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகையினை மேலும் அதிகரிக்க எதிர்வரும் சனிக்கிழமை கல்பிட்டி, கப்பலடியில் நீர்ச்சருக்கல் போட்டி நிகழ்ச்சிகள் ரெட் புள் நிறுவனத்தினால் நடாத்தப்படவுள்ளது. இதற்கான பயிற்சிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தற்போது ஈடுப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X