2025 மே 24, சனிக்கிழமை

புத்தளம் - வணாத்தவில்லு வீதி புனரமைப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் புத்தளம், வணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வீதிகளினை 10 நாள் திட்டத்திற்குள் உள்ளடக்கி 150 கிலோ மீற்றர் தூரம் புனரமைக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, மின்சார, கடற்றொழில் அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.

கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி புனரமைப்பு பணிகளின் இறுதி நாள் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி அவர் தெரிவித்தார்.

இவ்வீதி புனரமைப்பு பணிகளில் பிரதேச மக்களின் பங்களிப்பே அதிகம் காணப்படுவதாகவும், இது போன்ற 10 நாள் வேலை திட்டங்களினை வணாத்தவில்லு பிரதேச சபை போன்று மிகவும் வருமானம் குறைந்த ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாகவும் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.

ஒழுங்கு செய்யப்பட்ட 10 நாள் வேலைத்திட்டத்தின் இறுதி நாளான இன்று வடமேல் மாகாண வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, மின்சார, கடற்றொழில் அமைச்சினதும், பிரதேச செயலகத்தினதும், பிரதேச சபையினதும் நடமாடும் சேவை நடைப்பெற்றதுடன் வணாத்தவில்லு வைத்தியசாலையில் இலவச கண் பரிசோதனையும், வறுமானம் குறைந்தவர்களுக்கு மூக்குக்கண்ணாடியும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X