2025 மே 24, சனிக்கிழமை

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

ஜம்மியத்துல் சபா நிறுவனம் புத்தளத்தில் ஏற்பாடு செய்த இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் இன்று சனிக்கிழமை புத்தளம், குவைத் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அல்பசர் சர்வதேச அமைப்பு மற்றும் நூர் டுபாய் நிறுவனம் என்பனவற்றின் அனுசரணையுடன் நடைப்பெறும் இவ் இலவச கண் சத்திர சிகிச்சை முகாமின் ஆரம்பிப்பு நிகழ்வில் அல்பசர் நிறுவன பணிப்பாளர் டாக்டர். சாதிக் மசூர், தனியார் வைத்திய நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் டாக்டர். காந்தி ஆரியரத்ன, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், புத்தளம் தள வைத்தியசாலை அத்தியட்சகர் அசோக பெரேரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜம்மியத்துல் சபா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் 13ஆவது கண் சத்திரசிகிச்சை முகாம் இதுவெனவும் இதனால், இது வரை 11,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என ஜம்;மியத்துல் சபா நிறுவன அதிகாரி தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X