2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பள்ளிக்கண்டல் தேவாலயத்தின் உற்சவத்தினை முன்னிட்டு உள்வீதி புனரமைப்பு

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், எழுவன்குளம் பகுதியினை அன்மித்து காணப்படும் மிகவும் பழமை வாய்ந்த பள்ளிக்கண்டல் தேவாலயத்தின் உற்சவத்தினை முன்னிட்டு குறித்த தேவாலயத்துக்கு செல்லும் உள்வீதி புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.

எதிர்வரும் 15ஆம் திகதி நடைப்பெறவுள்ள தேவாலய உற்சவத்துக்கு வருகை தரும் மக்களின் போக்குவரத்து நெருக்கடியினை தீர்ப்பதற்கு உள்வீதியினை புனரமைத்து தருமாறு தேவாலயத்தின் அருட் தந்தை கூறியதினையடுத்து மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவுடன் மேற்படி நடவடிக்கையினை எடுத்துள்ளார்.

இதேவேளை, யுத்தம் நடைப்பெற்று வந்த காலங்களில் வரலாற்று சிறப்புமிக்க குறித்த தேவாலயத்தில் உற்சவங்கள் நடைப்பெறவில்லையெனவும் தற்போது நிலவும் சமாதான சூழ் நிலையில் 3ஆவது தடவையாக இவ் வருடம் குறித்த தேவாலயத்தில் உற்சவ நிகழ்வுகள் நடைப்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ் வருடம் 2 இலட்சம் மக்கள் வருகை தரலாமென எதிர்ப்பார்ப்பதாகவும் தேவாலயத்தின் அருட் தந்தை தெரிவித்தார்.

சேதமுற்ற நிலையில் காணப்பட்ட பள்ளிக்கண்டல் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .