2025 மே 24, சனிக்கிழமை

புத்தளத்தில் டெங்கு ஒழிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 10 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் புத்தளம் தளவைத்தியசாலை ஆகியன இணைந்து புத்தளம் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை டெங்கொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

வீடுகளும் வியாபார நிலையங்களும் சோதனையிடப்பட்டதுடன் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.

டெங்கு நோய் பரவக்கூடிய விதத்தில் சூழலை வைத்திருந்தோர் எச்சரிக்கப்பட்டனர்.  இதன்போது சிவில் பாதுகாப்பு படையினர் ஒத்துழைப்பு வழங்கினர். எனினும், இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில்  பொது சுகாதார பரிசோதகர்கள் எவரும்  பங்குபற்றவில்லை.
 
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைளை முன்நின்று வழிகாட்டும் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கைளில் பங்குபற்றாது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் நேற்று  தாக்கப்பட்டு உயிரிழந்ததை கண்டித்தே பொது சுகாதார பரிசோதகர்கள்  இந்த  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X