2025 மே 24, சனிக்கிழமை

ஆணின் மரணம் தொடர்பில் புத்தளத்தில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் புதுக்குடியிருப்பு  9ஆம் வட்டார கடற்கரையோரத்தில் கடந்த மே மாதம் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கரையொதுங்கிய ஆண் ஒருவரின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 8 மாணவர்கள் உட்பட 10 பேரை இம்மாதம் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியளில் வைக்கும்படி புத்தளம் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை குறித்த கடற்கரைப் பிரதேசத்தில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக பொது மக்கள் புத்தளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு வந்த பொலிஸார்  நீதவான் விசாரணையைத் தொடர்ந்து சடலம் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலதிக வைத்திய பரிசோதனைக்காக சடலம் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், சடலம் வைத்திய பரிசோதனைக்கும் உட்படத்தப்பட்டது. மரணமான குறித்த நபர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறித்த அறிக்கை நிதிமன்றிலும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொர்பாக சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்து தொடர்ந்து 2 மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 மாணவர்கள் உட்பட 10 பேரும் மீண்டும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மாணவர்கள் கல்வி கற்பதால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதாகவும் அவர்களுக்கு பிணை வழங்குமாறும் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.

எனினும் அவர்களுக்கான பிணையை நிராகரித்த நீதிபதி, பிணை வழங்கும் அதிகாரம் உயர்நீதிமன்றிற்கே உள்ளது என்றும் கூறி அவர்களை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X