2025 மே 24, சனிக்கிழமை

புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)


புத்தளம்  தள வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று  இன்று  புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.   புத்தளம்  தள வைத்தியசாலை  வைத்திய அத்தியட்சகர் அஷோக பெரேரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்   வடமேல் மாகாண சுகாதார,  சுதேசிய  வைத்திய, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அசோக வடிகமங்காவ  கலந்து கொண்டார்.

புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ்,  வடமேல்  மாகாண சபை உறுப்பினர்கள்,    வடமேல் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்   உட்பட  புத்தளம் பிரதேச அரச நிறுவனங்களின்  தலைவர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக வடமேல் மாகாண  அமைச்சர் அசோக வடிகமங்காவ இக்கூட்டத்தில் விளக்கமளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X