2025 மே 24, சனிக்கிழமை

வவுனியாவிலிருந்து சென்ற இரு தனியார் பஸ்கள் மீது கல்வீச்சு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது கற்களினால் வீசித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் இப்பஸ்களின் இரு சாரதிகளும் காயமடைந்துள்ளதாகவும் முந்தல் மற்றும் கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இத்தாக்குதலில் இவ்விரு பஸ்களும் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார்  பஸ்ஸொன்று பாலாவிக்கும் மதுரங்குளிக்குமிடையில் கல்வீச்சுத் தாக்குதலுக்குள்ளானதாக பொலிஸார் கூறினர். வானொன்றில்  வந்த சிலர் இத்தாக்குதலை மேற்கொண்டுவிட்டு  தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த அநுராதபுரத்தைச் சேர்ந்த பஸ்ஸின் சாரதியான சாந்தகுமார புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று சனிக்கிழமை அதிகாலை வென்னப்புவ நைனமடம் பிரதேசத்தில் மற்றுமொரு பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ நைனமடம் பிரதேசத்தில் மறைந்திருந்த சிலர் தான் செலுத்திச் சென்ற பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது தனக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் இப்பஸ்ஸின் சாரதி முறைப்பாடு செய்துள்ளதாகவும் கொச்சிக்கடை பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் வென்னப்புவ பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதால், இது தொடர்பான விசாரணையை  கொச்சிக்கடை பொலிஸார்,  வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X