2025 மே 23, வெள்ளிக்கிழமை

பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளருக்கு விளக்கமறியல்

Super User   / 2012 ஜூலை 15 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதியமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் இணைப்புச் செயலாளரை ஜூலை 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான ருவந்திகாக மாரப்பன உத்தரவிட்டுள்ளார்.

மோசடி குற்றச்சாட்டு மற்றும் நீதிமன்றுக்கு சமுகமளிக்கத் தவறியமைக்காக பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்  தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு தனியார் நிறுவனங்களுக்கு மேற்படி சந்தேக நபர் வழங்கிய சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள், வங்கிக் கணக்கில் பணமில்லாததால் திரும்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 5 தடவை பிடிவிறாந்து பிறப்பித்தது. எனினும் அவரை கைது செய்ய பொலிஸார் தவறினர்.

எனினும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பொலிஸாரின் நடவடிக்கையின்மை தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றில் சரணடைந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X