2025 மே 23, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸை தொடர்ந்து ஏமாற்றும் செயலை அரசு நிறுத்த வேண்டும்: மாகாண சபை உறுப்பினர் எஹியா

Super User   / 2012 ஜூலை 27 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தொடர்ந்து ஏமாற்றி வருகின்ற திட்டங்களை அரசு கைவிட வேண்டும் என வடமேல் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீட உறுப்பினருமான எஸ்.ஏ. எஹியா தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸை நேர்மையான அரசியலை செய்வதற்கு அனுமதிப்பதன் மூலமே அரசாங்கத்தின் திட்டங்களுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு அனுமதிக்காவிட்டால் அரசின் அனைத்து திட்டங்களும் படுதோல்வியடையும் என அவர் தெரிவித்தார்.

தற்கால அரசியல் தொடர்பாக வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் தெரிவிக்கையில்,

"கிழக்கு மாகாண சபை தேர்தல் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் எடுத்த தீர்மானம் அரசின் சதிகளை தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் நேர்மையான அரசியலை செய்துகொண்டிருக்கின்றது.

ஆனால்,  ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்தும் செயலையே அரச தரப்பு செய்து வருகின்றது. வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை தொடர்பாக அரசின் கடிதத்தை சபைக்கு கொடுத்த போதும் அக்கடிதத்தை தூக்கி எறியப்பட்ட நிலை போன்றே செயற்பாடுகள் இருந்து வருகின்றன.

கிழக்கு மாகாண சபை தேர்தல் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் பேரம் பேசும் சக்தியாக மாறியுள்ளது என்ற நிலையினை அரசாங்கத்தின் கருத்துக்கள் மூலம் நாம் விளங்கிவருகின்றோம். எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு சரணாகதி அரசியலையும் செய்யாது.  கடந்து வந்த அனுபவங்களை வைத்து உறுதியான முடிவுகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • jesmin Sunday, 29 July 2012 04:57 PM

    அரசாங்கத்துடன் உங்களது கட்சி சேர்ந்தும் இருக்கவேண்டும். அமைச்சுப்பதவிகளை பெறவும் வேண்டும்,சலுகைகளை அனுபவித்து சொகுசு வாழ்க்கை வாழவும் வேண்டும் . அரசாங்கத்தை எதிர்ப்பதாக அறிக்கைவிடவும் வேண்டும். எத்தனை வேடத்தில்தான் நடிக்கின்றீர்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X