2025 மே 23, வெள்ளிக்கிழமை

வங்குரோத்து அரசியல் செய்யும் நோக்குடன் கட்சிக்குள் நுழைய விரும்புவர்களுக்கு இடம் கிடையாது: புத்தளம்

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மேலும் வலுப்படுத்துவதற்கும், அதனூடாக முஸ்லிம்களின் உரிமைகளை கௌரவமான முறையில் வென்றெடுக்கும் நோக்கில் அரசியல் செய்ய விரும்புவோர் மட்டுமே எதிர்கால மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும். தவறான அணுகுமுறைகளுடன் வங்குரோத்து அரசியல் செய்யும் நோக்குடனும் கட்சிக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிர்காலத்தில் கட்சிக்குள் எந்த இடமும் கிடையாது என  வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான எஹியா ஆப்தீன் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து கட்சி ஆதரவாளர்களை  சந்தித்து தெளிவுபடுத்திய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"நான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்துகொள்ளப் போவதாக என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலர் கட்டுக்கதைகளை கூறி வருகிறார்கள்.

உண்மையில் எனது தந்தையின் அரசியல் பிரவேசமும், அவரது நடவடிக்கைகளும் ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் புத்தளத்திலுள்ள முஸ்லிம்களின் உரிமை, அபிவிருத்தி என்பனவற்றை முதன்மைப்படுத்தி கடந்த 12 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒரு போராளியாக இருந்து வருகிறேன்.

மட்டுமன்றி கடந்த நான்கு முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மாகாண சபைக்குப் போட்டியிட்டு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். ஆனால் இந்தக் கட்;சியை காட்டிக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய எந்த தேவையும் எனக்கு கிடையாது.

கடந்த காலங்களில் எமது கட்சியுடன் இணைந்து கொண்டிருந்தவர்கள் தமது சுய இலாபங்களுக்காக, தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக இந்தக் கட்சியை விட்டு விலகிப் போனார்கள்.

ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக மீண்டும் இந்தக் கட்சிக்குள் நுழைவதற்கு மிகவும் பிழையான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தூய்மையான முறையில் புத்தளத்திலுள்ள முஸ்லிம்களின் ஏக உரிமைகளை கௌரவமாக பெற்றுக் கொள்வதற்கு துணிச்சலான போராளிகளுக்கு மட்டுமே எதிர்காலங்களில் வடமேல் மாகான சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • jesmin Wednesday, 01 August 2012 06:01 AM

    உங்களது கட்சி வங்குரோத்து நிலைக்கு வந்துள்ள விபரம் உங்களுக்கு இன்னும் தெரியாதா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X