2025 மே 23, வெள்ளிக்கிழமை

இலவன்குளம் முஸ்லிம் வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஒக்டோபர் 01 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

புத்தளம் வடக்கு கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட இலவன்குளம் முஸ்லிம் வித்தியாலய அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை  நிவர்த்தி செய்ய  கோரியும் இன்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு முன்னால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'தமது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலையில் முக்கிய பாடமான கணித பாடத்திற்கு மிக நீண்ட காலமாக ஆசிரியர் ஒருவர் இல்லை. அத்துடன் இந்த பாடசாலையில் போதிய ஆசிரியர்கள் இன்றி எமது பிள்ளைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலையில் கடமையாற்றிய அதிபரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எமது பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்குமாறு வேண்டியும் எமது அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும் கோரியுமே நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டோம்'  என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

உலக சிறுவர் தினத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X