2025 மே 23, வெள்ளிக்கிழமை

உப்பு விலை வீழ்ச்சி; உற்பத்தியாளர்கள் கவலை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


புத்தளத்தில் தற்போது உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் உற்பின் விலை மிகவும் குறைந்துள்ளமையினால் உப்பு உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கையின் தேசிய உற்பத்தியில் பெரும் பங்காற்றுகின்ற புத்தளத்தில் இருந்தே பெரும்பாலான இடங்களுக்கு மிகவும் சுத்தமான அயடின் கலந்த உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது.

எனினும் புத்தளத்தில் தற்போது உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் உப்பின் கொள்வனவு விலை எதிர்பாராத வகையில் குறைவடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
ஆரம்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு ஒரு மூடையொன்றின் விலை 400 ரூபா முதல் 475 ரூபா வரை காணப்பட்டது. ஆனால் தற்போது 80ரூபா முதல் 275 ரூபா வரை காணப்படுவதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் சுத்தம் செய்யப்படாத உப்பின் கொள்வனவு விலை திடீரென குறைவடைந்துள்ளமையினால் உற்பத்தியாளர்கள் மட்டுமன்றி, உப்பு உற்பத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகின்ற தொழிலாளர்களும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புத்தளத்தில் உப்பின் விலை குறவைடைந்துள்ளமை பற்றி வரையறுக்கப்பட்ட புத்தளம் உப்பு உற்பத்தி சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் எம்.எச்.எம்.நவவியிடம் கேட்டதற்கு, புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரிச்சங்கத்தின் கீழ்தான் இந்த வரையறுக்கப்பட்ட உப்பு சந்தைப்படுத்தல் நிறுவனம் உள்ளது. எமது சங்கத்தில் 300 உரிமையாளர்கள் இருக்கிறார்கள். நாம் வருடமொன்றுக்கு 40 மெட்ரிக்த் தொன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயன் பெறுகின்றன. கடந்த காலமாக நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரட்சி காரணமாக புத்தளத்தில் என்றும் இல்லாத வகையில் உப்பு உற்பத்தியின் விளைச்சள் அதிகரித்துள்ளது.

மட்டுமன்றி புத்தளத்தில் உள்ள பெரும்பாலான இறால் பண்ணைகளில் தற்பொது உப்பு உற்பத்திகளே செய்யப்படுகிறது. எமது சங்கத்தின் கீழ் நூற்றுக்க 60 வீதமான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அது தவிர வெளியே மிகுதி 40 சதவீமானவர்கள் உப்பு உற்பத்தியை மேற்கொள்கின்றனர்.

எனவே எமது சங்கத்தின் கீழ் உள்ள உப்பு உற்பத்தியாளர்களிடமிருந்து நாம் சுத்தம் செய்யப்படாத உப்பு ஒரு மூடை 275 ரூபாவிற்கு கொள்வனவு செய்கிறோம். ஆனால் எமது சங்கத்திற்கு வெளியே இருந்து உற்பத்தி செய்கின்ற 40சதவீதமான உற்ப்ததியாளர்களின் உப்புக்களே 80 ரூபாவில் இருந்து கொள்வனவு செய்யப்படுகிறது.

உண்மையில் இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு நாம் மிகவும் சுத்தமான முறையில் சத்தீகரிக்கபபட்ட அயடின் கலநத உப்பையே வழங்குகிறோம். இதனால் உப்பு உற்பத்தியாளர்களும் பயன் பெருகிறார்கள் பொது மக்களும் சுத்தமான, சுகாதாரமான, தரமான உப்பை கொள்வனவு செய்கிறார்கள்.

ஆனால் இன்று புத்தளத்திலுள்ள னைய 40 வீதமான உப்ப உற்பத்தியாளர்களின் உப்புக்களை நாம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவற்றை பெற்று சுத்தம் செய்வதற்கு தேவையான இயந்திரத்தின் கொள் அளவு போதாமையாகும்.

தற்போது உள்ள இயந்திரத்தின் ரூலம் நாளொன்றுக்கு 10 தொன் உப்பு சுத்தம் செய்ய முடியும். ஆனால் புத்தளத்திலுள்ள அனைத்து உப்பு உற்பத்தியாளர்களின் உப்புக்களையும் நாம் கொள்வனவு செய்வதாக இருந்தால் அதற்கு நாளொன்றுக்கு 100 தொன் சுத்திகரிக்கக் கூடிய இயந்திரம் தேவை. எனவே குறித்த இயந்திரத்தை பெற்றுக் கொடுக்கமாறு நாம் சுகாதார அமைச்சிடமும், அரசாங்கத்திடமும் கேட்டிருக்கிறோம்.

குறித்த இயந்திரம் கிடைக்கும் பட்சத்தில் புத்தளத்திலுள்ள அனைத்து உப்பு உற்பத்தியாளர்களின் உப்புக்களையும் நாமே நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய முடியும். என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X