2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஜீப் வண்டி மின்கம்பத்துடன் மோதி விபத்து

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த, அப்துல்லாஹ்)


கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு ஜீப் வண்டி ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிலாபம் நகரில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தின் காரணமாக சிலாபத்தில் ஒரு பகுதிக்குரிய மின்சாரம் தடைப்பட்ட போதும் ஜீப் வண்டியில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஜீப் வண்டி அதிசக்திவாய்ந்த மின்கம்பத்துடன் மோதியதில் மின் கம்பம் உடைந்து வீழ்ந்ததன் காரணமாகவே சிலாபம் நகரில் ஒரு பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டது.

எனினும் மின் கம்பம் உடைந்து வீழ்ந்துள்ளதுடன் ஜீப் வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக வீதியில் சென்று கொண்டிருந்த ஏனைய வாகனங்களுக்கோ விபத்திற்குள்ளான ஜீப் வண்டியில் பயணித்தோருக்கோ பாதிப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸார் கூறினர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X