2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளத்தில் டெங்கு ஒழிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ்)

மதுரங்குளி நகரில் இன்று வியாழக்கிழமை காலை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் பிரதேச சபை மற்றும் முந்தல் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து இந்நடவடிக்கையினை மேற்கொண்டன.

மதுரங்குளி நகரில் கடந்த சில தினங்களாக டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மதுரங்குளி நகரில் உள்ள அனைத்து கடைகள், கால்வாய்கள் என்பவற்றுக்கு டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் புகை விசிரப்பட்டது. அத்துடன் டெங்கு நுளம்பு பெரும் இடங்களும் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X