2025 மே 23, வெள்ளிக்கிழமை

சேதங்களை மதிப்பிட சென்ற குழுவினரின் வாகனம் மீது மரம் விழுந்தது

Kogilavani   / 2012 நவம்பர் 01 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வாகனம் மீது பாரிய மரமொன்று  விழுந்ததினால்  வாகனம் பலத்த சேதற்திற்குள்ளாகியது.

புத்தளம் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை வீசிய கடும் காற்றினால் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பிட சென்ற குழுவினரின் வாகனமே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

மேற்படி வாகனத்தில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வாகனத்தில், புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பொறுப்பாளர் பிரிக்கேடியர் ரணவீர தலைமையிலான குழுவினர் பயணித்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய கடும் காற்றினால் வீடுகள், கடைகள் உள்ளடங்களாக 20 கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்  நான்கு பேர் காயமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்தது.

புத்தளத்தில் 10 வீடுகள் சேதமுற்றுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் உடப்பு பிரதேசத்தில் 10 கட்டடிடங்கள் சேதமுற்றுள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு உடனடியாக விஜயம் மேற்கொண்ட புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் நிலைமைகளினை நேரடியாக அவதானித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X