2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கிழக்கு நுவரகம் பிரதேச அரச காணிகளில் சட்டவிரோதமாக கட்டடங்கள்: பிரதேச செயலாளர்

Super User   / 2012 நவம்பர் 22 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம், கிழக்கு நுவரகம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரிவில் சுமார் 556 அரச காணிகளில் சட்டவிரோதமாக கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர் சமன் பந்தலசேன தெரிவித்தார்.

கிழக்கு நுவரகம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அரசாங்கத்திற்கு  சொந்தமான பெறுமதிமிக்க காணிகளில் சட்டவிரோதமாக பலர் குடியேறியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானவை என்பதை இதுவரையிலும் அதிகாரிகள் அடையாளப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாகக் கைப்பற்றிய காணிகளில் சுமார் 178 காணித் துண்டுகள் நுவரவாவி நீர்ப்பாசனத் திட்டத்துக்குரியதுடன் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான நிகழ்வுகள் அநுராதபுரம் மாநகர எல்லைக்குள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளருக்கு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X