2025 மே 23, வெள்ளிக்கிழமை

உழவு இயந்திர கலப்பை திருட்டு; மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 23 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

உழவு இயந்திரத்தின் கலப்பையை திருடி விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரையும் இந்தக் கலப்பையை வாங்கியதாகக் கூறப்படும் இரும்பு வியாபாரி ஒருவரையும் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலாவி பகுதியில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றில்  வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் கலப்பையே  2 நாட்களுக்கு முன்னர் திருட்டுப்போயுள்ளது.

இந்த கலப்பை திருட்டுப்போனமை தொடர்பில் புத்தளம் பொலிஸில் தோட்ட உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இந்த கலப்பையை பாகங்களாகப் பிரித்து இரும்பு வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ததாக புத்தளம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த கலப்பையை திருடிய இரு சந்தேக நபர்களும் அதனை வாங்கிய சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன், இரும்பு வியாபாரியிடமிருந்து உழவு இயந்திரத்தின் கலப்பையையும் பொலிஸார் கைப்பற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X