2025 மே 23, வெள்ளிக்கிழமை

வட மத்திய மாகாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்பு தொகுதி: முதலமைச்சர்

Super User   / 2012 நவம்பர் 25 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்திலுள்ள  ஊடகவியலாளர்களுக்காக வீடமைப்புத் தொகுதியொன்றை அமைக்கவுள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்தார்.

"பிரதேச ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்காக சிறந்த சேவையினை முன்னெடுக்கின்றனர். அரசியல்வாதிகள் உரிய சேவைகளை ஊடகம் மூலம் கொண்டு செல்லும் செயற்பாடுகள் சிறந்தது. எனவே அவர்களுக்காக வீடமைப்பு உட்பட சகல வசதிகளையும் வழங்க நான் விசேட கவனம் செலுத்துவேன்" என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பலரினால் அநுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டங்கள் வழங்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்ட போதிலும் அது ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை தனது ஆட்சிக் காலத்தில் வீடு வசதிகளற்ற 50,000 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள், கடனுதவிகள் மற்றும் குளங்களை அண்டி வாழும் மக்களுக்கான வீடமைப்பு வதிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X