2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது

Super User   / 2012 நவம்பர் 25 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்,  எஸ்.எம்.மும்தாஜ்)


மாராவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுஸ் தேவாலயத்திற்கு முன்னால் அமந்துள்ள ஆடம்பர வீட்டின் அறையொன்றில்  சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டமை பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவல விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட தேடுலின் போது இந்த வீடு முற்றுகையிட்டுள்ளது.

இதன்போது, குறித்த வீட்டில் இருந்து கசிப்பு உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்திய ஆறு கேஷ் அடுப்புக்கள், ஆறு கேஸ் சிலிண்டர்கள், ஆறு செப்புக்கம்பிச் சுருள்கள், பாரியளவிலான அல்மேனியம் அடங்கிய ஐந்து முட்டிகள், ப்ளாஸ்டிக் பெரல்கள் 51 உட்பட கசிப்பு உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மாராவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, மாராவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலமஹவெவ வெல்கெலே  பிரதேசத்தில் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள உள்ள காட்டுப் பகுதியில்  சட்டவிரோதமாக செயற்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை மாராவில பொலிஸார் நேற்று  சனிக்கிழமை மாலை  முற்றுகையிட்டுள்ளனர். 

முற்றுகையிட்ட போது சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செயய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கசிப்பு உற்பத்திக்காக  பயன்படுத்தப்படும் கோடா டிரேம் 18920, உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பு டிரேம் 400, அடுப்புகள், பெருமளவிலான அல்மேனியம் கொண்ட மூன்று முட்டிகள் மற்றும் சிறியளவிலான அல்மேனியம் அடங்கிய முட்டிகள் மூன்று ப்ளாஸ்டிக் பெரல்கள் 11 மற்றும் 32 ப்ளாஸ்டிக் கேன்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் சில காலமாக இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மாராவில பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச். எம். ரத்னதிலக, பொலிஸ் பரிசோதகர் விக்கிரமநாயக்க ஆகியோர் தலைமையிலான குழுவினர்  இந்த தேடுதல் நடவக்கையைில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாராவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X