2025 மே 23, வெள்ளிக்கிழமை

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுவதாக அநுராதபுரம் கோட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மஹேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

'ப்ளேன் ஸ்ரீலங்கா' அமைப்பின் அனுசரணையில் ரஜரட்ட ஊடகவியலாளர் சங்கம் அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அனுராதபுரம் கோட்டத்தில் இதுவரையில் 2230 பெரும் குற்றச் செயல்கள் இவ்வருடம் பதிவாகியுள்ளன. இதேவேளை இவ்வருடத்தில் மாத்திரம் பாலியல் வல்லுறவு மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 226 பதிவாகியுள்ளன.

இவற்றில் 16 வயதின் கீழ் 101 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 46 பாரதூரமான சம்பவங்களும், 43 கடத்தல் சம்பவங்களும், பெண்கள் கொலைச் சம்பவம் 1  காயப்படுத்திய 2 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அநுராதபுரத்தில் பதிவாகும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் அதிகமானவை 16 வயதிற்குட்டவைகளாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X