2025 மே 23, வெள்ளிக்கிழமை

கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

Super User   / 2012 நவம்பர் 29 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வாழை பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதாகக் கூறி கஞ்சா செடிகளை வளர்த்த நபரை நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

திரப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதுல்கம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் சிறிது காலமாக கஞ்சா செய்கையில் ஈடுபட்டு வந்ததோடு விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.திரப்பனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரப்பனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ். பீ. எதிரிசிங்கவின் ஆலோசனைப்படி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X