2025 மே 23, வெள்ளிக்கிழமை

நீர்ப்பாசனத் திட்டங்களை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றல்

Super User   / 2012 நவம்பர் 29 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் காணிகளை அபகரித்து பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை உடனடியாக அப்புறப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கமநல சேவைகள் மற்றும் வன விலங்குகள் பிரதி  அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன மற்றும் வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் ஆகியோரின் இணைத் தலைமையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திட்டங்களை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளபட்டு வரும் சட்டவிரோத கட்டிட நிர்மாணங்கள், சட்டவிரோத பயிர்ச் செய்கைகள் போன்றவற்றால் நுவர வாவி மற்றும் ராஜாங்கனை ஆகிய குளங்களுக்கு பல  பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு பிரதேச மட்டத்தில் தகவல் சேகரிக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X