2025 மே 23, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு பஸ் டிப்போ ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 30 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                 (கே.எம்.முனாஷா)
இலங்கை போக்குவரத்து சபையின் நீர்கொழும்பு,   பெரியமுல்லையில் அமைந்துள்ள பஸ் டிப்போ ஊழியர்கள் கடந்த மூன்று மாதகாலமாக தமக்கு வேதனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாழக்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக நீர்கொழும்பிலிருந்து சேவையிலீடுபடும் போக்குவரத்து சபையின் பஸ்கள் டிப்போவில் தரித்து வைக்கப்பட்டுள்ளன. பணி பகிஷ்கரிப்பினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எமக்கு கடந்த மூன்று மாத காலமாக வேதனம் வழங்கப்படவில்லை. இதனால் எமது குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உரிய தீர்வு கிடைக்கும் வரையில் பகிஷ்கரிப்பு தொடரும் என பஸ் டிப்போ ஊழியர்கள் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X