2025 மே 23, வெள்ளிக்கிழமை

மின்சார வேலிகளை அமைக்கும் பணி சிவில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                     
 'யானை - மனிதர்  மோதலைத் தடுக்கும் நோக்கில் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகள் மற்றும் மின்சார வேலிகளை அமைத்தல், பாதுகாத்தல், வழிநடாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பினை சிவில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கும் பணி அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது' என வனவிலங்குகள் மற்றும் கமநல சேவைகள் பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அநுராதபுரம் வனவிலங்குகள் திணைக்களத்தில் 300 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மின்சார வேலிகள் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதோடு எதிர்வரும் சில தினங்களுக்குள் ஹொரவப்பொத்தானை பகுதியில் அமைக்கப்படவுள்ள யானைகள் சரணாலயத்தைச் சுற்றி அமைக்கபடவுள்ள மின்சார வேலியின் பணிகளும் சிவில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இதேவேளை தற்போது பல்வேறு கிராமிய அமைப்புகளினால் வழிநடாத்தப்பட்டு வரும் 1800 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள  மின்சார வேலிகளின் வழிநடாத்தல் பணிகளும் இவ்வருட முடிவுக்குள் சிவில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக அடுத்த வருடத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 1000 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மின்சார வேலியின் பணிகள் மற்றும் வழிநடாத்தல் பணிகளும் சிவில் பாதுகாப்பு படைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது'  என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X