2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வருமானவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அநுராதபுரம் வங்கிப் பிரதேசத்தில் உள்ள உள்நாட்டு வருமானவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் பிரதான நீதவான் றுவந்திகா மாரப்பன முன்னிலையில் இவர்கள் நேற்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் இதற்கான
உத்தரவைப் பிறப்பித்தார். 

அநுராதபுரம் வங்கிப் பிரதேசத்தில் உள்ள உள்நாட்டு வருமானவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஊழல் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால்; நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

அநுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் வருமான வரியினை குறைந்த நிலைக்கு அமைத்துத் தருவதற்காக 5 இலட்சம் ரூபாவை இவர்கள் கேட்டுள்ளனர்.  இந்த நிலையில்,  இந்தப்  பணத்தை உள்நாட்டு வருமானவரித் திணைக்கள வளாகத்தில் வைத்து வழங்கும்போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X