2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இரு மாணவர்களுக்கிடையில் கைகலப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

பாடசாலை மாணவி ஒருவரைக் காதலித்த மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் அந்த மாணவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.

இந்த கைகலப்பில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். 

ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு இடையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

'பாடசாலை மாணவி ஒருவரை இந்த மாணவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். தாங்கள் இருவரும் குறித்ததொரு மாணவியையே காதலிப்பதாக இவர்களுக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த மாணவர்கள் இருவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டுள்ளனர்' என்றனர் 

காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான விசாரணையை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X