2025 மே 23, வெள்ளிக்கிழமை

மது அருந்திவிட்டு நண்பர்களுடன் குளத்தில் குளித்தவர் சடலமாக மீட்பு

Super User   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ், அப்துல்லாஹ்)

மாதம்பை பிரதேசத்தில் மதுபானம் அருந்திவிட்டு நண்பர்கள் சிலருடன் இணைந்து குளமொன்றில் குளிப்பதற்காக நேற்று புதன்கிழமை சென்ற ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலம் பிரதேசவாசிகளினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மாதம்பை செம்புக்கட்டி லியகொமுவ வத்தை எனும் பிரதேசத்தில் வசிக்கும் சாமர பிரசன்ன எனும் 25 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.

ஐவர் அடங்கிய நண்பர்கள் குழு மாதம்பை வாலஹேன குளத்தின் அருகே மதுபானம் அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்.  இவ்வாறு மதுபானம் அருந்திய பின்னர்  மாலை 3.30 மணியளவில் அவர்கள் அக்குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
 
இவ்வாறு குளத்தில் இறங்கியவர்களுள் உயிரிழந்தவர் சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளார்.  பின்னர் இது தொடர்பில் ஏனையவர்களுடன் பிரதேசவாசிகள் மாதம்பை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் இவ்வாறு குளத்தில் காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையினை பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த குளத்தில் உள்ள சுமார் 12 அடி ஆழமுள்ள குழியொன்றில் கிடந்த நிலையில் காணாமல் போனவரன் பிரேதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் பிரேதம் பிரேத பரசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாத்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X