2025 மே 23, வெள்ளிக்கிழமை

நெல் மூட்டைகளைத் திருடிய இளைஞர் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 08 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

மிஹிந்தலை மஹகனந்தராவ முதலாம் வாய்க்கால் பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து 24 நெல் மூட்டைகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை மிஹிந்தலைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இரவு வேளையில் வீட்டுக்குள் பகுந்து களஞ்சியசாலையிலிருந்த நெல் மூட்டைகளைத் திருடிக் கொண்டிருந்த போது சத்தம் கேட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், களஞ்சியசாலைக்கு சென்று பார்க்குமிடத்து சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலைப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • kanavaan Saturday, 08 December 2012 06:03 PM

    என்ன சார், நீங்க நெல் மூடை, திருடிறவங்கள மட்டும்தான் கைது செய்வீர்களா? இந்த நாட்டையே திருடவங்க இருக்காங்க சார், அவங்களையும் ட்ரைபண்ணி அரஸ்ட்பண்ணப் பாருங்க சார் என்ன நடக்குதெண்ணு பாப்பம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X