2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வடமத்திய மாகாணத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்தின் வருடாந்த பால் உற்பத்தியை 3 இலட்சத்து 65 ஆயிரம் லீற்றர் வரை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத் துறையை 19 மில்லியனால் அதிகரிக்கும் பாரிய செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக 26 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் தெரிவித்தார்.

தற்பொழுது வடமத்திய மாகாணத்தில் 23 ஆயிரத்து 500 பதிவு செய்யப்பட்ட மிருக வளர்ப்புப் பண்ணைகள் உள்ளன. 2 இலட்சத்து 19 ஆயிரம் பசு மாடுகளும், 54 ஆயிரம் எருமை மாடுகளும் பால் பெறும் நோக்கில் வளர்க்கப்படுகின்றன.

இதன்மூலம் பால் உற்பத்தியாளர்கள் வருடமொன்றிற்கு 1250 மில்லியன் ரூபாவினை ஈட்டிக் கொள்கிறார்கள். சிறந்த ரக கறவைப் பசுக்களைத் தருவித்தல், 100 பால் பண்ணைகளை அபிவிருத்தி செய்தல் உட்பட பல செயற்பாடுகளும் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன என்று முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .