2025 மே 23, வெள்ளிக்கிழமை

'அரசாங்க ஊழியர்களே அதிகளவில் தொற்றா நோய்களுக்கு உள்ளாகின்றனர்'

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 11 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அரச ஊழியர்களே அதிகளவில் தொற்றா நோய்களுக்குள்ளாகி அவதிப்படுவது தெரியவந்துள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் எச்.பீ.சேமசிங்க தெரிவித்தார்.

உலகத்தில் சுகாதாரத் துறைக்காக மக்களுக்கு இலவசமாக சலுகைகளை வழங்கும் ஒரே நாடு இலங்கையாகும். சுகாதாரத் துறையை முன்னேற்ற எவ்வளவுதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அலுவலகங்களில் இருந்து கொண்டு சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது.
 
மக்களிடம் சென்று பொதுமக்களின் உதவியின் ஊடாகவே இதனைத் தீர்க்க முடியும். அதிகமான அதிகாரிகளினால் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை. எனவே இது விடயத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூடிய கரிசனை கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X