2025 மே 22, வியாழக்கிழமை

தக்காளி, சோளப் பயிர்ச்செய்கைக்குள் கஞ்சாச் செடி; சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

தக்காளி மற்றும் சோளப் பயிர்ச் செய்கைக்குள் 184 கஞ்சா செடிகளை வளர்த்த நபர் ஒருவரை மிஹிந்தலை குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரம்பேவௌ சங்கிலிக்குளம் பகுதியில் சோளம் மற்றும் தக்காளி பயிர்களுக்கிடையில் சந்தேக நபர் கஞ்சா செடிகளையும் வளர்த்துள்ளதோடு சகல கஞ்சா செடிகளையும் பொலிஸார் பிடுங்கி எடுத்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபரின் சேனைக்கு அருகிலுள்ள இடத்தை பரிசோதித்த போது மிருகங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காட்டுத் துவக்கினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு குறித்த சேனையின் உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X