2025 மே 22, வியாழக்கிழமை

தண்டவாளத்தில் வெள்ளம்: ரஜரட்ட ரயில் இடைநிறுத்தம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பெய்துவருகின்ற அடைமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தண்டவாளத்தையும் மேவி பாய்ந்தமையினால் ரஜரட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

குருநாகல்-வெல்லவைக்கு இடையில் கதிரான பகுதியில் வெள்ளம் தண்டவாளத்தை மேவி பாய்ந்ததை அடுத்தே ரஜரட்ட ரயில் குருநாகலுக்கு அப்பால் சேவையில் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் தண்டவாளத்தின் இரண்டு பக்கங்களும் கழுவிக்கொண்டு போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கனேவத்தை ரயில் நிலையத்தில் சில ரயில்கள் பல மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமையினால் அந்த ரயிலில் பயணித்த ஆயிரக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X