2025 மே 22, வியாழக்கிழமை

விவசாயிகளுக்கு சேதனப் பசளைகளை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் விவசாயிகளுக்கு சேதனப் பசளைகளை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கமநல சேவைகள் மற்றும் வனவிலங்குகள் பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

மானிய முறையில் இரசாயனப் பசளை வழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசாங்கம் வருடமொன்றிற்கு 60 பில்லியன் ரூபா நிதியினைச் செலவிடுகிறது. இரசாயனப் பசளைப் பாவனையினால் பல்வேறுபட்ட நோய்களுக்குக் காரணமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேதனப் பசளை தயாரிக்கும் செயற்றிட்டம் வடமத்திய மாகாணத்திலுள்ள 23 ஆயிரம் குடும்பங்களை இணைத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சேதனப் பசளை தயாரிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை இலவசமாக அரசாங்கம் வழங்குவதோடு விவசாயிகளினால் தயாரிக்கப்படும் சேதனப் பசளை ஒரு கிலோ கிராமினை 8 ரூபாவுக்கு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கவுமுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X