2025 மே 22, வியாழக்கிழமை

கற்பிட்டி பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

கற்பிட்டி பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் இன்று வியாழக்கிழமை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை இன்று சபையில் சம்ர்ப்பித்தார்.

இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டத்தில் எமது பிரதேச அபிவிருத்திகளுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீட செய்யப்பட்டுள்ளது. மட்டுமன்றி, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என்பனவற்றிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் எமது பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் உதவிபுரிய வேண்டும் என வரவு-செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் குறிப்பிட்டார்.

அத்துடன் உறுப்பினர்களும் இதன்போது தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவாக அளும் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த ஓர் உறுப்பினருமாக 11 பேர் வாக்களித்ததுடன், பிரதேச சபையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X