2025 மே 22, வியாழக்கிழமை

நிவாரணம் வழங்குமாறுகோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து ஆனமடுவ பிரதான வீதியில் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் இவ்வீதியுடானன போபக்குவரத்து சுமார் 15 நிமிடம்வரை ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டது.

தேக்கவத்த, முக்கந்தலுவ, வெஹரகெல ஆகிய கிராம மக்களே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து சிலாபம் பொலிஸார் தலையிட்டு போக்குவரத்தினை சீர்செய்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தினையடுத்து குறித்த இடத்துக்கு வருகை தந்த பிரதியமைச்சர் நியமோல் பெரேரா அவர்களுக்குரிய நிவாரணம் வழங்கப்படுமென உறுதியளித்ததினையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X